PulseNews
அரசியல்

மதுரை மாட்டுத்தாவணி ஆக்கிரமிப்பு: ஆணையாளர் அதிரடி.. கடைகளுக்கு அபராதம்!

ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்திடும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை ஆணையாளர் திரு.கௌரவ் குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுமாறு உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சி, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்திடும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை ஆணையாளர் திரு.கௌரவ் குமார், இன்று (24.08.2026) பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதியில் செயல்படும் கடைகளுக்கு வணிக உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்திடவும், உரிமம் பெறாத கடைகளை ஆய்வு மேற்கொண்டு, அவற்றை உடனடியாக அகற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாநகராட்சி மூலம் கடைகளின் முன்புறம் வரையப்பட்டுள்ள எல்லைக்கோடுகளை மீண்டும் அளவீடு செய்து வரைந்திடவும், எல்லைக்கோடுகளை தாண்டி கடைகள் அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்திடவும், மேலும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் உத்தரவிட்டார்.

ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

முன்னதாக, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுகழிப்பறையில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை தரமாகவும், பணிகளை உரிய நேரத்துக்குள் விரைந்து முடித்து கழிப்பறையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கழிப்பறையை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, ஆணையாளர் அவர்கள், மதுரை மாநகராட்சி, தமுக்கம் எதிர்ப்புறம் உள்ள சாலையில், மாநகராட்சியின் மண்கூட்டும் இயந்திரம் மூலம் சாலைகளின் ஓரங்களில் சேர்ந்துள்ள மணல்களை அகற்றும் பணிகள் நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நகர்நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி அவர்கள், உதவி செயற்பொறியாளர் திரு.ஆரோக்கிய சேவியர் அவர்கள், உதவி பொறியாளர் மயிலேறிநாதன் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரை மாட்டுத்தாவணி ஆக்கிரமிப்பு: ஆணையாளர் அதிரடி.. கடைகளுக்கு அபராதம்!
PulseNews சுருக்கம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள், பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தது மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமாரின் ஆய்வில் தெரியவந்தது.

இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையாளர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics