PulseNews
அரசியல்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் வார விடுமுறை; 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் விக்னேஷ்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடியது. இந்நிலையில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மீண்டும் கூடிய சட்டசபை: ஒரே செல்போனில் மாறி மாறி பேசிய அக்ரி கிருஷ்ண மூர்த்தி, சேகர் பாபு 23 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபான கடையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 1-1-2026 முதல் ஊதிய உயர்வு அறிவிக்கப்படுகிறது. மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டொன்றிற்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி ஆகும். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி ஒதுக்கீடு, வாரத்திற்கு 1 நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிருவ் திறம்பட செயல்படுவதற்காக 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் அத்தியாவசிய செயல்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக மொத்தம் ரூ.2.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கள்ளச்சாராயம், போலி, மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துவதற்கான நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். மதுபானத்திற்கு 1 ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் முதல்முறை 3 மாதங்களுக்கு தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மீண்டு கூடுதலாக வசூலித்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழக்கப்படும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் வார விடுமுறை; 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் விக்னேஷ்
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்பான ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு 33,023 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்துடன் வார விடுமுறையும் வழங்கப்படும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics