PulseNews
அரசியல்

“அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட உறுதியேற்போம்” - முதல்வர் விஜய்!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, ‘சென்னை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உருவான நாளை நினைவு கூறும் வகையில் இந்த தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 387வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இந்த தினத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த தினத்துக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள். வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது. சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்” எனத் தெரிவித்துள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட உறுதியேற்போம்” - முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை உருவான நாளை நினைவுபடுத்தும் வகையில் ‘சென்னை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையின் 387-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சென்னை தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட உறுதி ஏற்போம் என்று முதல்வர் விஜய் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics