சற்று முன்.... MLA-க்கள் ராஜினாமா செய்தனர்...! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு! பரபரக்கும் அரசியல்...!!!
43 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடுவதற்கான போதிய சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. உட்கட்சி மோதலில் எழுந்த தகுதிநீக்க கோரிக்கை அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலின்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சில எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றச் சபாநாயகரிடம் நடவடிக்கை கோரப்பட்டிருந்தது. இதையும் படிங்க: திமுக- வின் அடுத்த மூவ்.... விஜய்யின் எம்.எல்.ஏ பதவி செல்லாது? இரண்டு வாரம் டைம்.... உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு உத்தரவு..!!! கோரிக்கைகளை திரும்பப் பெற்ற இரு தரப்பும் இதற்கிடையில், குறிப்பிட்ட எம்எல்ஏக்களில் 4 பேர் காலப்போக்கில் ராஜினாமா செய்தனர். எஞ்சியவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த தகுதிநீக்க கோரிக்கைகள் இரு தரப்பினராலும் முறையாகத் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, அந்த எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை கைவிடுவதாக சபாநாயகர் அறிவித்தார். சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டமன்றச் சபாநாயகர் எடுத்த முடிவில் தலையிடுவதற்கு போதிய சட்டப்பூர்வ காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறியது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதையும் படிங்க: அண்ணி த்ரிஷாகாக தான் இங்க சண்டை நடக்குது! CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே திரிஷா மட்டும் தான்... ஆர்பி உதயகுமார் பேசிய அசிங்கமான பேச்சு! சர்ச்சை வீடியோ...!!!

அதிமுகவின் 43 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சபாநாயகரின் இந்த முடிவில் தலையிடுவதற்குப் போதிய சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், அதிமுக உட்கட்சி மோதலின் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தொடர்பாக எழுந்த தகுதிநீக்க விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.