PulseNews
அரசியல்

ஸ்ரீரங்கம் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் பாதுகாப்பு பெட்டகம்

திருச்சி: தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், இன்று முதல் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன்களை பாதுகாக்க 3 கோபுர வாசல்களிலும், சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 ஆயிரம் பெட்டகங்களில் அதிகபட்சமாக 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், "இன்று முதல் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன்கள் அனுமதிக்கப்படாது. இதற்காக, ஸ்ரீரங்கம் தெற்கு கோபுர வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் என 3 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தெற்கு கோபுர வாசல் பகுதியில் காலணிகள் பாதுகாக்குமிடம் அருகில் உள்ள கவுன்டரில், வங்கி லாக்கர் போன்று 2 ஆயிரம் பெட்டகங்கள் உள்ளன. இதில், ஒரே குழுவாக வந்தால் ஒரு பெட்டகத்திற்கு 5 செல்போன்கள் வரை வைத்து கொள்ளலாம். அதேபோல், வடக்கு, கிழக்கு வாசல்களில் தலா 500 பெட்டகங்கள் கொண்ட செல்போன் வைப்பறைகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 3,000 பெட்டகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைக்க முடியும். இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.குறிப்பாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடிந்த அளவுக்கு தங்களது செல்போன்களை வீட்டிலோ அல்லது வாகனத்திலோ பத்திரமாக வைத்து விட்டு வந்தால், கோயில் பணியாளர்களின் பணிச்சுமையும், கோயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரமும் குறையும்" என்றனர்.

Etv Bharat15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஸ்ரீரங்கம் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் பாதுகாப்பு பெட்டகம்
PulseNews சுருக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் செல்போன்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கென கோயில் கோபுர வாசல்களில் சிறப்பு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மயங்களில் மொத்தம் 3 ஆயிரம் பெட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இவற்றில் அதிகபட்சமாக 15 ஆயிரம் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க முடியும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், பக்தர்கள் இனி கோயில் வளாகத்திற்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics