PulseNews
அரசியல்

“ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்” - தயாநிதி மாறன் எம்.பி. விளாசல்!

ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள் என சென்னை மத்திய தொகுதியில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளருமான தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொகுதி மறுவரையறை விவகாரம் : தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை வேண்டாம் (No Delimitation) என்ற நாடகம் ஏன்? தங்கள் பிரதிநிதி (Proxy) அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த ரேவந்த் ரெட்டியைக் கேள்வி கேட்கத் துணியுமா? த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?. நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) என்ற நிலைப்பாட்டிலிருந்து தொகுதி மறுவரையறை வேண்டாம் (No Delimitation) என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா? அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை? தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி தொகுதி மறுவரையறை நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?. தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது அற்ப அரசியல் (Petty Politics) அன்றி வேறல்ல. நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி (Proxy) அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்” - தயாநிதி மாறன் எம்.பி. விளாசல்!
PulseNews சுருக்கம்

சென்னை மத்திய தொகுதி மக்களவை உறுப்பினரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளருமான தயாநிதி மாறன், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினரை விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மட்டும் நாடகமாடும் காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஏன் மௌனம் காக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படும் தவெக கட்சியினர் வெளியிடும் ரீல்ஸ்களை மக்கள் நம்பமாட்டார்கள் என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நியாயமான மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளதாகவும், தமிழகத்தில் அவர்கள் மேற்கொள்வது அற்ப அரசியல் என்றும் தயாநிதி மாறன் சாடியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics