PulseNews
அரசியல்

அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தனது முதலமைச்சர் கடமையிலிருந்து தவறுகிறார் என்று முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வே.நாராயணசாமி கடுமையாகச் சாடியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தமிழ்நாடு கோவளம் பகுதியில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. மாநிலத்தின் முக்கிய வளர்ச்சிப் பணிகள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட மிக முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிப்பதே இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்க நல்ல வாய்ப்பு:

புதுச்சேரி மாநில மக்களின் பல ஆண்டுக்காலப் பிரதான கோரிக்கையாக இருப்பது 'மாநில அந்தஸ்து' பெறுவதே ஆகும். மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக வலியுறுத்துவதற்கு இந்த தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும். ஆனால், முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடரும் புறக்கணிப்புகள்:

முதலமைச்சர் ரங்கசாமி தனது பொறுப்பையும் கடமையையும் செய்வதிலிருந்து தொடர்ந்து தவறக்கூடாது. இதற்கு முந்தைய தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டையும் அவர் புறக்கணித்திருந்தார். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த முதலமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

தனக்குக் கிடைக்கும் இதுபோன்ற அதிகாரப்பூர்வ வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டு, புதுச்சேரியில் இருந்துகொண்டே மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் மத்திய அரசு கண்டிப்பாக அதை வழங்காது என்று வே.நாராயணசாமி தனது ஆடியோ பதிவில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
PulseNews சுருக்கம்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது கடமைகளை முறையாக நிறைவேற்றவில்லை என முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், மாநில வளர்ச்சி மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிக்கிறாரா என்ற கேள்வியை நாராயணசாமி எழுப்பியுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics