Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

பயம் இருக்க வேண்டும்:

லஞ்சம் இல்லாத சமூகம் என்பது வாய்ப்பே கிடையாது. அது 100 சதவீதம் நடக்காது. அது கமிஷன், அன்பளிப்பாக உள்ளது. அந்த காசை வருமான வரித்துறை எடுத்து மக்களுக்கே கொடுங்கள் என்று வேண்டுகோளாக வைக்கிறேன்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மரண தண்டனை இல்லாமல் உள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு குழந்தைகள் மட்டுமின்றி யார் மீது நடத்தப்பட்டாலும் அதற்கு மரண தண்டனை கொண்டு வர வேண்டும். பயம் இருந்தால்தான் குற்றம் நடக்காது.

உதயநிதியை உள்ளே தூக்கி வச்சுட்டாங்க:

போதைப்பொருள் பள்ளியிலே நுழைந்துவிட்டது. ஜாபர் சேட்-னு ஒருத்தரை பிடித்தார்களே அது என்னாச்சு? எனக்குத் தெரியல. போதைப்பொருள் என்பது தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. அதை என்னால் மறுக்க முடியாது.

பெண்கள் எதிரான வன்முறைக்கு தூங்கும்போது கூட சாட்டையால் அடிக்க வேண்டும். என் நண்பன் உதயநிதி ஏதோ சொல்லிவிட்டார் என்று உள்ளே தூக்கி வச்சுட்டாங்க. அப்புறம் வெளிய வந்துட்டாரு. அந்த மாதிரி நிறைய பேரு இருக்காங்க. எங்கள் கதாநாயகி, மூத்த நடிகர்கள் பற்றி தவறாக யூ டியூப்பில் பேசுற பலர் இருக்காங்க. அவங்களை தூர்தர்ஷனில் பேசச் சொல்லுங்கள். ஏனென்றால், காசு கிடைக்காது. யூ டியூப்பில் பேசினால்தான் காசு கிடைக்கும்.

முற்றுப்புள்ளி:

முதலமைச்சர் விஜய் இப்போது ஒரு விஷயம் பண்ணாரு. பெண்கள், மூத்த நடிகைகள் பற்றி யூ டியூப்பில் கேவலமாக பேசுறாங்க. அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கனும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திரைப்பிரபலங்கள் பலரது மீதும் யூ டியூப்பில் பலரும் மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொடர்ந்து மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திரையுலகினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், நடிகர் விஷாலும் தனது திரைப்பட நிகழ்ச்சி மூலமாக முதலமைச்சர் விஜய்க்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் விஷால் நடித்துள்ள 'மகுடம்' திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஷால், லஞ்சம் இல்லாத சமூகம் என்பது சாத்தியமற்றது என்றும், லஞ்சப் பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றி மக்களுக்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உதயநிதி ஸ்டாலின் பேசினார் என்பதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வெளியில் பலரும் அதுபோன்ற கருத்துகளைத்தான் பேசி வருகிறார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.