PulseNews
அரசியல்

'காங்கிரஸின் நன்றியற்ற அரசியல்... தவெகவை கிண்டலடிக்கும் மாணிக்கம் தாகூர்'-பகிர்ந்த வல்லம் பஷீர்

தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள அரசியல் கூட்டணியில் ஆளும் தவெக அரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் முன்னிறுத்தல் மற்றும் கட்சி ஆதிக்கம் தொடர்பாகக் கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. தேசிய அளவில் வலுவான கூட்டணி அமையாத நிலையில்,மாநில கட்சிகள் தங்களின் எதிர்காலப் பிரதமரை இப்போதே தீர்மானிக்க முயல்வது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில், ''காங்கிரஸின் இரத்தத்திலேயே காரியம் ஆகும் வரை காலைப் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடிப்பதும் தொன்று தொட்டு ஊறிப்போயிருக்கிற ஒரு செயல். தவெக தலைவர் விஜய், அதிகாரத்தில் பங்கு தந்து, செத்துப் போய் கிடந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்து, 5 சீட்டுகளுடன் சுற்றுலாத்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகிய 2 முக்கிய மந்திரி பதவிகளையும் வழங்கினார். ஆனால், இன்றைக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், விஜய் மற்றும் அவரது தொண்டர்களை 'இன்னும் ரசிக மனப்பான்மையில் இருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்' என்று கிண்டல் செய்கிறார். ராகுல் காந்தியின் தயவால்தான் இந்த தவெக ஆட்சி நிலைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தகாது. கடந்த காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2019-லேயே யருமே வாய் திறக்காத நேரத்தில் 'எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்று துணிச்சலாக அறிவித்து உயர்த்திப் பிடித்தார். அந்த அணுகுமுறையும் பறந்துபட்ட பார்வையும் விஜய் கிட்ட எப்படி இருக்கும்? ஆனால் இப்போதே ராகுலைத் தலைவராக ஏற்கக் கோரி தவெக-வை காங்கிரஸ் மிரட்டப் பார்க்கிறது. உண்மையில், காங்கிரஸ் தங்களின் சொந்தப் பலம் அறியாமல் காட்டுக் கூச்சல் போடுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், அல்லது பீகாரின் தேஜஸ்வி யாதவ் என எவராவது 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனரா? காங்கிரஸின் அகில இந்திய தலைமையே இதனை இன்னும் டிக்ளர் செய்யாத போது, தமிழகத்தில் தவெக-வை முடக்கப் பார்ப்பது வேடிக்கையானது. காங்கிரஸ் கட்சி தவெக-வை எச்சரிக்கையோடு அணுக வேண்டும்; இல்லையெனில் தவெக அமைத்துள்ள புதிய கூட்டணி பலவீனப்பட்டுப் போகும்'' என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'காங்கிரஸின் நன்றியற்ற அரசியல்... தவெகவை கிண்டலடிக்கும் மாணிக்கம் தாகூர்'-பகிர்ந்த வல்லம் பஷீர்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள அரசியல் கூட்டணியில், நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களை முன்னிறுத்துவது மற்றும் கட்சி ஆதிக்கம் ஆகியவற்றில் தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. காங்கிரஸ் கட்சியின் அரசியல் நன்றியற்றது என மாணிக்கம் தாகூர் விமர்சிப்பதாக அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் நக்கீரன் டிவி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் வலுவான கூட்டணி அமையாத நிலையில், மாநிலக் கட்சிகள் தங்களின் எதிர்காலப் பிரதமரை இப்போதே தீர்மானிக்க முயல்வது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics