தென்மாநில முதல்வர்கள் மாநாடு.. மேகதாது அணையை விட்டுக் கொடுக்காத கர்நாடகா.. தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
Southern Zonal Council Meeting: சென்னையில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மேகதாது அணை திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தினார். அதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நீரைத் திறக்க வேண்டும் என உறுதியாக வலியுறுத்தப்பட்டது.

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மேகதாது அணைத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பகிர்வு தொடர்பான கோரிக்கைகளை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முன்வைத்தார்.
இந்தக் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உரிய முறையில் திறந்துவிட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.