அமெரிக்காவுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!
ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் எரிசக்தித் தடைப் புள்ளிகள் மீது பலத்த பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் ஈரான் எச்சரித்துள்ளது. குறித்த எச்சரிக்கையை ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி வெளியிட்டுள்ளார். ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வழியாக அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். எதிரிகளின் தவறான கணிப்பு ஈரானின் ஆயுத உற்பத்தி தடையின்றித் தொட...

ஈரானின் உள்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன் சார்ந்த இடங்கள் மற்றும் எரிசக்தி விநியோக மையங்கள் மீது கடுமையான பதிலடித் தாக்குதல்களை நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி, அந்நாட்டு அரசு ஊடகமான IRIB வாயிலாக இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எதிரிகளின் தவறான கணக்கீடுகள் ஈரானின் ஆயுத உற்பத்தித் திறனை எவ்விதத்திலும் பாதிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளுக்கு எதிராக இந்த கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.