PulseNews
அரசியல்

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

சென்னை கோவளத்தில் நாளை (20-08-26) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை பலப்படுத்த மாநாட்டில் ஆலோசிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான தென்மண்டலக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணைத் தலைவராக தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (19-08-26) மாலை சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்த அமித் ஷாவும் தமிழக முதல்வர் விஜய்யும் இன்று சந்தித்துள்ளனர். கோவளம், மாமல்லபுரம் அருகே உள்ள பிஷர் மேன் கோவ் என்ற ஓட்டலில் இருவரும் சந்தித்து உணவு அருந்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றப் பிறகு, அமித் ஷாவை முதல் முறையாக சந்தித்துள்ளனர். தென்மண்டல முதல்வர்கள் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
PulseNews சுருக்கம்

சென்னை கோவளத்தில் நாளை (ஆகஸ்ட் 26) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த முக்கியக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. முதலமைச்சர்களுடன் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics