அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்
ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(31) தெரிவித்துள்ளார். "நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். பதிலடி கொடுக்கப்படும்," என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறினார். தாக்குதல்களை முறியடித்த அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்பு ஈரானிலிருந்து வந்த பெரும்பாலான தாக்குதல்களை அமெர...

ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களை அமெரிக்காவின் வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
ஈரானின் இச்செயலுக்கு எதிராக அமெரிக்கா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தாங்கள் ஈரானை கடுமையாகத் தாக்குவோம் என்று அவர் ஃபோக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் உறுதிபடக் கூறியுள்ளார்.