PulseNews
அரசியல்

பகுதி, ஒன்றியம், நகர கழகங்கள் மறுசீரமைப்பு: 76 பிரதிநிதிகளை நியமித்து தி.மு.க தலைமை உத்தரவு

கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகத் தலைவர் அவர்கள் 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார். தொடர்ந்து, கழக சீரமைப்புக் குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்களை மறுசீரமைத்துத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பார்வையிடுவதற்காக, ஒரு வருவாய் மாவட்டத்திற்கு இருவர் வீதம் மொத்தம் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்குழுக் கூட்டங்கள்: மாவட்டக் கழகச் செயலாளர்கள் நடத்தும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்கள் அனைத்தும் நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழகப் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடத்தப்பட வேண்டும். கருத்துகள் மற்றும் மாறுபாடுகள்: பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட, கிளை கழகங்கள் மறுசீரமைப்பில் ஏதேனும் கருத்துகளோ அல்லது மாறுபாடுகளோ இருப்பின், கழகத்தினர் தங்களது மாவட்டத்திற்குரிய தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன், வரும் புதன்கிழமை (செப்டம்பர் 02, 2026) அன்று மாலை 5 மணியளவில் கழகத் தலைவர் தலைமையில் ஆலோசனைக் காணொலிக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களைச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நாட்களில் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் தலைமைக்கழக அறிவிப்பு கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழகத் தலைவர் அவர்கள் 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார். கழக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் –... pic.twitter.com/IVNwsmVur4 — DMK (@arivalayam) August 31, 2026

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பகுதி, ஒன்றியம், நகர கழகங்கள் மறுசீரமைப்பு: 76 பிரதிநிதிகளை நியமித்து தி.மு.க தலைமை உத்தரவு
PulseNews சுருக்கம்

தி.மு.க தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 110 கழக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்களை மறுசீரமைக்கும் பணிகளை நேரடியாகக் கண்காணிப்பதற்காக, வருவாய் மாவட்டத்திற்கு இருவர் வீதம் மொத்தம் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகளை நியமித்து தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. சீரமைப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics