வீடுகளை இழந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க சி.பி.எம் அமைச்சரிடம் மனு!
சிதம்பரம் பகுதியில் வீடுகளை இழந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக லால்புரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கையகப்படுத்தி, உடனடியாக வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி தலைமையில் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், கிளைச் செயலாளர் சுரேஷ், குடியிருப்போர் சங்கப் பொருளாளர் சிலம்பரசன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அந்த மனுவில், சிதம்பரம் பகுதியில் பல்வேறு காரணங்களால் வீடுகளை இழந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாற்று இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி, தகுதியான குடும்பங்களுக்கு மாற்று வீட்டுமனை வழங்க வேண்டும். புதியதாக அமைந்துள்ள தமிழக அரசு, இக்கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்ட உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சிதம்பரம் பகுதியில் தங்களது வீடுகளை இழந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக லால்புரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் மனு அளித்தும், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். தங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.