PulseNews
அரசியல்

நிரந்தர சபாநாயகர் இல்லாவிட்டால் பட்ஜெட்டை புறக்கணிப்போம்: புதுச்சேரி அரசுக்கு தி.மு.க எச்சரிக்கை

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிரந்தர சபாநாயகரை நியமிக்காமல் தற்காலிக சபாநாயகரைக் கொண்டு கூட்டத்தொடரை நடத்தினால் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டை புறக்கணிக்கப் போவதாக தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார். மேலும், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தேசியக் கொடி மரபுகள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி காவல்துறைக்கு வண்ணக்கொடி அங்கீகாரம் வழங்கும் நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். காவல்துறை சார்பில் நடைபெற்ற அந்த நிகழ்வில்,முதலாவதாக வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து ஒளிக்கப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாட வேண்டும் என்ற நிலையை புதுச்சேரி அரசு உருவாக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் இந்த கருத்தை வலியுறுத்த போவதாகவும் தெரிவித்தார். புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற தேசியக்கொடி பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய கொடியால் பேரணியை துவக்கி வைத்திருக்கிறார் இது மரபு அல்ல, தேசியக்கொடி தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமே தவிர தாழ்ந்து இருக்கக் கூடாது, தேசிய கொடியால் பேரணியை துவைக்க வைத்தது ஏற்புடையது அல்ல என்று குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் ஆட்சி அமைந்து சுமார் 90 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்படவில்லை, பா.ஜ.க-வுக்கு தான் சபாநாயகர் பதவி என்று திட்டவட்டமாக பா.ஜ.க அறிவித்துள்ள நிலையில்,நிரந்தர சபாநாயகரை நியமிக்காமல் தற்காலிக சபாநாயகரை வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டினால், கவர்னர் உரை மற்றும் பட்ஜெட்டை புறக்கணிப்போம் என்றும் நாஜிம் தெரிவித்தார். செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நிரந்தர சபாநாயகர் இல்லாவிட்டால் பட்ஜெட்டை புறக்கணிப்போம்: புதுச்சேரி அரசுக்கு தி.மு.க எச்சரிக்கை
PulseNews சுருக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நிரந்தர சபாநாயகரை நியமிக்காமல், தற்காலிக சபாநாயகரை வைத்து கூட்டத்தொடரை நடத்தினால், ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டை புறக்கணிப்போம் என தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் எச்சரித்துள்ளார்.

மேலும், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், தேசியக் கொடிக்கான மரபுகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி காவல்துறைக்கு வண்ணக்கொடி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சூழலில் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics