PulseNews
அரசியல்

நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்

நீட் தேர்வுக்கு தொடரும் எதிர்ப்பு

நீட் தேர்வால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் நீட் தேர்வு அச்சத்தால் ஏராளமான மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தின் குரலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் திமுகவின் காந்திச் செல்வன். இவரே, நீட் தேர்வுக்கான சட்டத்தை கொண்டு வர காரணமானவர் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நீட் தேர்வு கொண்டுவர யார் காரணம்.?

ஆனால் திமுக தரப்போ இந்த நீட் மசோதாவை தாக்கல் செய்தது திமுக அமைச்சர் காந்திசெல்வன் அல்ல, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் தான் என வாதாடி வருகின்றனர். ஆனால், நேரடியாக இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்படும் காந்தி செல்வனோ இதுவரை இதில் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.இந்நிலையில், நேற்று தமிழக சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் 'வீ த லீடர்' அமைப்பின் தலைவருமான அண்ணாமலையும் கூட நீட் தேர்வு வருவதற்கு காரணம் திமுக முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன் தான் என தெரிவித்திருந்தார்.

பதிலளிக்காத காந்தி செல்வன்

ஆனால், அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக கருத்துத் தெரிவித்து திமுகவின் காந்தி செல்வனை குற்றஞ்சாட்டியும் அவர் இதுகுறித்து மறுத்து பேசவோ அறிக்கை வெளியிடவோ இல்லை.இதனையடுத்து, ABP நாடு செய்தி நிறுவனம் அவரை நேரடியாக தொடர்புகொண்டு பேசியது. நீட் தேர்வு மசோதாவை நீங்கள்தான் கொண்டுவந்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனரே என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,

அதற்கு பதிலளித்த காந்தி செல்வன் 'இதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே, செய்தித் தாளிலும் வந்திருக்கிறதே' என்றால், மீண்டும் நாம் எழுப்பிய நீட் மசோதாவை நீங்கள் கொண்டுவந்து தாக்கல் செய்தீர்களா? அல்லது இல்லையா? என்று மட்டும் அறியவிரும்புகிறோம் என்று சொன்னதும் 'செய்தித் தாளுக்கு நான் பேசியிருக்கிறேன். அதை பின்னர் அனுப்புகிறேன்' என்றும் வேறு வேலையில் இருப்பதாகவும் கூறி, அதற்கு மேல் பேசவும் பதிலளிக்கவும் மறுத்துவிட்டார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
PulseNews சுருக்கம்

நீட் தேர்வால் நாடு முழுவதும் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த காந்தி செல்வனிடம், நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்காமல் அவர் நழுவிச் சென்றார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics