PulseNews
அரசியல்

'மறுசீரமைப்பு..'-காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சி மறுசீரமைப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், என்.வி,செந்தில்நாதன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கின் வரவேற்றார். கூட்டத்தில், கடலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மேலிடப் பார்வையாளருமான கே.டி.உதயம் பங்கேற்று இயக்க மறு சீரமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி ஒன்றிய, பேரூர், நகரத் தலைவர்கள் பதவிக்கான விருப்ப மனுக்களை பெற்றார். கூட்டத்தில், 10 வாக்குசாவடிக்கு ஒரு மண்டல தலைவர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கி, 90 புதிய பொறுப்புகளுக்கும், அதே சமயம் 7 ஒன்றிய தலைவர், 9 பேரூராட்சி தலைவர், ஒரு நகர தலைவர், என மொத்தம் 107 பதவிகளுக்கு 400 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்குள் பெறுவது, மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், மாநிலப் பொதுக்குழு டாக்டர் செந்தில்வேலன், மணிமொழி, சாம்பமூர்த்தி, மாநிலச் செயலாளர் ஜெயச்சந்திரன், புவனகிரி கே.ஜி.குமார், தலைமைக்கழக பேச்சாளர் மோகன்தாஸ், நகரச் செயல் தலைவர் தில்லை கோ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'மறுசீரமைப்பு..'-காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
PulseNews சுருக்கம்

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கட்சி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கின் வரவேற்புரையாற்றினார்.

முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், என்.வி.செந்தில்நாதன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் மேலிடப் பார்வையாளருமான கே.டி.உதயம் கலந்துகொண்டு, இயக்கத்தை மறுசீரமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics