புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உயர்வு: பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் குறித்து அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். உறுப்பினர்களின் கருத்துக்களுக்குப் பதில் அளித்து முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் பேசினார். அப்போது, புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது எரிவாயு சிலிண்டர் மானியமாக வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய், இனி 350 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதேபோல், மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி நிதி உதவித் தொகையை அரசே ஏற்று வழங்குவதைப் போல, வருகின்ற கல்வி ஆண்டு முதல் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் முழு கல்வி உதவித் தொகையை அரசே செலுத்தும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். உறுப்பினர்களின் கருத்துக்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதன்படி, புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய் எரிவாயு சிலிண்டர் மானியம், இனி 350 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.