தயார் நிலையில் தூக்குமேடை - 50 வருடங்களின் பின் மீண்டும் இலங்கையில் மரண தண்டனை!
இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை உடன் தற்போது இரு மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஒரே தூக்குமேடை இ...

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கும் பட்சத்தில், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடையைப் பயன்படுத்த அதிகாரிகள் ஆயத்தம் செய்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறையைச் செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக இருவர் தூக்குமேடை நிறைவேற்றுபவர்களாகப் பணியமர்த்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவர்களின் அடையாளம் இரகசியமாகப் பேணப்படுவதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.