"நீட் விலக்கு வேண்டும்" 9வது நாளாக தொடரும் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் - 3 பேர் உண்ணாவிரதம்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோயம்பேட்டில் உள்ள திருவள்ளுவர் இல்லத்தில் நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் 9வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் 4 பேர் பங்கேற்ற நிலையில், 6வது நாளில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது 3 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறையினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோயம்பேட்டில் உள்ள திருவள்ளுவர் இல்லத்தில் நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் நான்கு பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆறாவது நாளில் ஒருவர் உடல்நலக்குறைவால் விலகியதை அடுத்து, தற்போது மூன்று பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.