போலீஸார் லஞ்சம் கேட்டால் இனி தப்ப முடியாது! தனிப்பிரிவு தொடக்கம்... இந்த எண்ணில் புகார் கொடுங்க
சென்னை போலீஸ் லஞ்சம் புகார் எண்: ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கி, லஞ்சம் கேட்கும் காவலர்களுக்கு எதிராக பொதுமக்கள் 78717-23000 எண்ணில் ரகசியமாக புகார் அளிக்கலாம். Chennai anti-corruption police unit: New wing launched so public can confidentially report bribery by police via 78717-23000 for swift action.

சென்னையில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் காவல் துறையில் புதிய தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இனி காவல் துறையினர் லஞ்சம் கேட்டால், அது குறித்து பொதுமக்கள் 78717-23000 என்ற எண்ணில் அழைத்து ரகசியமாக புகார் அளிக்கலாம்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது விரைவான நடவடிக்கைகளை எடுக்க இந்த சிறப்பு பிரிவு வழிவகை செய்கிறது. லஞ்சத்திற்கு எதிரான இந்த முயற்சியின் மூலம் காவல்துறை ஊழலற்ற சேவையை உறுதி செய்யத் திட்டமிட்டுள்ளது.