PulseNews
அரசியல்

தொகுதி மறுவரையறை; முதல்வர் விஜய் நாளை எடுக்கும் அதிரடி முடிவு!

கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த போது நாட்டாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த மசோதாவை தோற்கடித்தன. இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆலோசிக்க தமிழக எம்பிக்கள் கூட்டத்தைத் தமிழக முதல்வர் விஜய் நேற்று (08-08-26) கூட்டினார். அதற்காகத் தமிழகத்தைச் சார்ந்த அனைத்து கட்சி எம்.பி க்களுக்கும் ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பங்கேற்காமல் புறக்கணித்திருந்தன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முதல்வர் விஜய் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட 19 எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர். அந்த கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு நடத்தக்கூடாது எனவும் நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்கள் அப்படியே தொடர வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நாளை (12-08-26) தொகுதி மறுவரையறை தொடர்பாக தனி த்தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் கொண்டு வரவுள்ளார். தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாக பாதிக்கப்படும் எனக் கூறி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தொகுதி மறுவரையறை; முதல்வர் விஜய் நாளை எடுக்கும் அதிரடி முடிவு!
PulseNews சுருக்கம்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துத் தோற்கடித்தன.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மீண்டும் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில், இது தொடர்பாக முதல்வர் விஜய் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics