பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக கண்டித்து ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்.பி.உதயகுமார் , செல்லூர் கே. ராஜு, வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் செல்லம்பட்டியில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிக்கை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது...," கழகபொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களைவஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்னையில் மெத்தனம்காட்டிவரும் த.வெ.க.அரசை கண்டித்தும், காவேரியில் நமக்குரிய பங்குநீரை,உரியமுறையில் பெறுவதற்குமுயற்சிஎடுக்காத த.வெ.க.பொய்க்கால்குதிரைஅரசை கண்டித்தும், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் செல்லம்பட்டியில் காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பொதுமக்களும் பெரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே ராஜு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி .வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகளும், மதுரை மாநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், விவசாய பெருமக்களும், பொதுமக்களும் பெரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார் .

விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செல்லம்பட்டியில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே. ராஜு மற்றும் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். காவிரி நீர் விவகாரம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரங்களில் அரசின் செயல்பாட்டை எதிர்த்து இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.