PulseNews
அரசியல்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம்; சபாநாயகர் மனுவால் திடீர் ட்விஸ்ட்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க.வின் மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., எஸ். ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ., பி. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். மற்றொருபுறம் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து 6 பேரும் சபாநாயகர் முன்பு நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது அவர்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏக்கள் சுயவிருப்பத்தின்படி தான் ராஜினாமா செய்தார்களா என்று சபாநாயகர் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அது மாதிரி விசாரணை நடத்தியதாகத் தெரியவில்லை. எனவே இது குறித்து சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘இந்த வழக்கில் ஏற்கெனவே சட்டமன்ற செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ள காரணத்தால் அதுவே போதுமானது. எனவே தனியாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறோம். சட்டமன்ற செயலாளர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்ததில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. மேலும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தங்கள் கைப்பட எழுதி அளித்த ராஜினாமா கடிதங்களை பரிசீலித்து அவர்களிடம் சுயவிருப்பத்தின்படி தான் ராஜினாமா செய்தீர்களா என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் திருப்தி அடைந்த பிறகு அதை ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே அவர்களின் ராஜினாமாக்களை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். எந்த சட்ட விரோதமும் இல்லை என்பதால் மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம்; சபாநாயகர் மனுவால் திடீர் ட்விஸ்ட்!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்த வரிசையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ பி. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா மற்றும் கரூர் எம்எல்ஏவும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமானவர்கள் அக்கட்சியில் சேரும் சூழலில், இந்த எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் தாக்கல் செய்துள்ள மனு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics