PulseNews
அரசியல்

டெல்லி கான்பிடன்ஷியல்: மோகன் பகவத் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் எதிர்ப்பு; சிவராஜ் சவுகானின் புதிய திட்டம்

நாட்டின் தலைநகர அரசியல் அதிகாரக் கூடங்களின் உள்ளரங்கு நிகழ்வுகளைத் தரும் 'டெல்லி கான்பிடன்ஷியல்' பகுதிக்கு வரவேற்கிறோம். இன்றைய பகுதியில் மோகன் பகவத்தின் மேடிசன் ஸ்கொயர் கார்டன் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பார்வை மற்றவர்களை புறந்தள்ளும் தன்மை கொண்டது என்று விமர்சித்தது முதல், தனது துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பையும் புரிதலையும் மேம்படுத்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ‘நோ யுவர் மினிஸ்ட்ரி’ (Know Your Ministry - உங்க அமைச்சகத்தை அறிந்து கொள்ளுங்கள்) என்ற புதிய முயற்சியைத் தொடங்கியது வரையிலான தகவல்கள் வரை பார்ப்போம். மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடக்கவிருக்கும் மோகன் பகவத்தின் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி எதிர்ப்பு தெரிவித்துடன், ஆர்.எஸ்.எஸ்ஸின் தொலைநோக்குப் பார்வை மற்றவர்களைப் புறந்தள்ளும் தன்மை கொண்டது எனக் குறிப்பிட்ட நிலையில், அதற்குப் பதிலாகக் கலந்துரையாடலை (Dialogue) ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது எதிர்வினையாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரப் பிரமுகர் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 29 அன்று நடைபெறவிருக்கும் மோகன் பகவத்தின் நிகழ்ச்சி திறந்த உரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாக கொண்ட மத நல்லிணக்கக் கூட்டம் (Interfaith gathering) என்று விவரித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘பார்வை மற்றும் தத்துவத்தை’ புரிந்து கொள்ள ஆர்வமுள்ள எவரும் அதன் திறந்தவெளி மன்றங்களில் பங்கேற்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தங்களை விமர்சிப்பவர்களும், அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்களும் நேரில் வந்து தங்கள் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பதையே ஆர்.எஸ்.எஸ் இதன் மூலம் உணர்த்துகிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான வேளாண் அமைச்சகம், தனது அதிகாரிகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பையும் பரஸ்பர புரிதலையும் மேம்படுத்தும் நோக்கில் ‘நோ யுவர் மினிஸ்ட்ரி’ (உங்க அமைச்சகத்தை அறிந்து கொள்ளுங்கள்) என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் கீழ், அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் தங்களது பணிகள், பொறுப்புகள் மற்றும் முக்கிய செயல்பாட்டுக் களங்கள் குறித்து விளக்கக்காட்சிகளை (Presentations) வழங்குகின்றனர். அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பங்களிப்பு குறித்து அதிகாரிகளுக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்லி கான்பிடன்ஷியல்: மோகன் பகவத் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் எதிர்ப்பு; சிவராஜ் சவுகானின் புதிய திட்டம்
PulseNews சுருக்கம்

நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவிருந்த மோகன் பகவத்தின் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜொஹ்ரன் மம்தானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றவர்களைப் புறக்கணிக்கும் வகையில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தனது அமைச்சக அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பையும் பரஸ்பர புரிதலையும் மேம்படுத்தும் நோக்கில் ‘நோ யுவர் மினிஸ்ட்ரி’ (Know Your Ministry) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics