ஆண்களுக்கும் வேண்டும் ‘Paternity Leave’.. 3-வது குழந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி!!
Paternity Leave for Men: குழந்தைகளை வளர்ப்பதில் தந்தைகளுக்கும் பொறுப்புள்ளதால் 'தந்தை விடுப்பு' வழங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகையைப் பெருக்க 3-வது குழந்தையை அரசு ஊக்கப்படுத்தக் கூடாது என்றும், மாணவர்கள் போராட்டத் தடை சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது சரியான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையர்களுக்கும் சமமான பொறுப்பு இருப்பதால், ஆண்களுக்கும் ‘தந்தை விடுப்பு’ (Paternity Leave) வழங்கப்பட வேண்டும் என்று எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகையை அதிகரிக்க மூன்றாவது குழந்தையைப் பெறுவதை அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் போராட்டத்திற்குத் தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்ற அரசின் முடிவை அவர் வரவேற்றுள்ளார்.