PulseNews
அரசியல்

பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!

பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூறி உள்ளதாவது:

’’தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி கால உதவி ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும்.

பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழ்நாட்டில்தான் இவர்களுக்கான பயிற்சிக் கால உதவி ஊதியம் குறைவாக உள்ளது. 2021ஆம் ஆண்டிற்குப் பிறகு பயிற்சிக் கால உதவி ஊதியம் உயர்த்தப்படவில்லை. தற்பொழுது பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.27,319 வழங்கப்படுகிறது. இவ்வூதியம் மேற்கு வங்கத்தில் ரூ 44,000, ஒடிசாவில் ரூ 40,000, அசாமில் ரூ 36,000 ஆக உள்ளது.

எவ்வளவு ஊதியம்?

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.52,451 முதல் ரூ.56,275 வரை வழங்கப்படுகிறது. இதுவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.93,559 முதல் ரூ.95,257 வரை வழங்கப்படுகிறது.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கு ரூ.54,636 முதல் ரூ.60,101 வரை வழங்கப்படுகிறது. இதுவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.85,000 முதல் ரூ.99,000 வரை வழங்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக பயிற்சிகால உதவி ஊதியம் வழங்கப்படுகிறது.

அரசு என்ன செய்ய வேண்டும்?

எனவே, இன்றைய பண வீக்கம், விலைவாசி உயர்வு, போக்குவரத்து சுட்டண உயர்வு, விடுதி மற்றும் உணவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.

பயிற்சி பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 36 மணி நேரம் வரை வேலை வழங்கப்படுகிறது. அவர்களின் பயிற்சிக்கு தொடர்பில்லாத வேலைகளும் மருத்துவக் காப்பீட்டு வேலைகளும் வழங்கப்படுகின்றன. இது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும்.

இத்தகைய உழைப்புச் சுரண்டலை எதிர்த்து, 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வழக்கை தொடர்ந்தது.

8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக வேலை

இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக வேலை வழங்கக் கூடாது என தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் அத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இதன் காரணமாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்கள் கடுமையான மன மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பலர் படிப்பை விட்டு விலகிவிடுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அவல நிலையைப் போக்குக

எனவே, இத்தகைய அவல நிலையை போக்கிட, எட்டு மணி நேரம் மட்டுமே தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதியிடன் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முதுநிலை மற்றும் உயர் சிறப்புப் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசுக்கு அக்கட்சியின் மாநில செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், பயிற்சி மருத்துவர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதர மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஊதிய விகிதத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இக்கோரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics