ஈரான் இராஜதந்திரத்தில் பிரான்ஸின் தலையீடு! உளவுத்துறையினரிடம் சிக்கிய தூதர்கள்
தேசியப் பாதுகாப்பு விசாரணை ஒன்றின்போது வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் ஈரானால் தடுத்து வைக்கப்பட்டதாக மத்திய கிழக்கு தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் தலையீடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்போது, உளவுப் பிரிவுகள் அந்த இரண்டு தூதர்களையும் தடுத்து வைத்ததாக அந்நாட்டு தரப்புக்கள் விளக்கியுள்ளன. ...

ஈரான் நாட்டில் வெளிநாட்டுத் தலையீடு மற்றும் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தேசியப் பாதுகாப்பு விசாரணை ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தியபோது, பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை அந்நாட்டு உளவுப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய கிழக்கு தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முறையான நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த இரு தூதர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக ஈரானிய தரப்பு விளக்கம் அளித்துள்ளது.