PulseNews
அரசியல்

அணி மாறினாலும் கொள்கையை மாற்ற முடியாது: வேளச்சேரி தி.மு.க மேடையில் ஆளூர் ஷாநவாஸ் அதிரடி

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வி.சி.க நிர்வாகியுமான ஆளூர் ஷாநவாஸ், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் தங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது; மாற்றம் நடந்துவிட்டது. ஆட்சி மாறிவிட்டது, காட்சி மாறிவிட்டது, அணிமாற்றம் நடந்துவிட்டது. ஆனால் அதற்காக எம்மைப் போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா? 3 மாதத்திற்கு முன்னால் வரை முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க, அவர் ஆற்றிய பணிகள் என்னென்ன என்றெல்லாம் பட்டியல் போட்டு நீட்டி முழங்கிய நாங்கள், இப்போது எங்கள் வாயைப் பூட்டி வைக்க முடியுமா? 'திராவிட மாடல், இந்தியாவுக்கே ரோல் மாடல்' என்று சொல்லி மேடைதோறும் முழங்கியிருக்கிறோம், மக்களிடம் போய் பேசியிருக்கிறோம். இல்லை இல்லை இப்போது மூன்று மாதத்தில் அது திராவிட மாடல் அல்ல என்று மாற்றிப் பேச முடியுமா? பேச முடியாது. பல ஆண்டுகளாக எந்தக் கருத்தை மக்களிடம் சொன்னோமோ, எந்தக் கொள்கையை முன்னிறுத்தினோமோ, எந்தக் கொள்கையின் ஐகானாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பார்த்தோமோ, அதை அப்படியே பார்க்கிறோம், அப்படியே தொடர்கிறோம். எந்த மாற்றமும் எங்களிடம் இல்லை. மாற்றிப் பேச முடியாது; மாற்றிப் பேசினால் அது மலிவான அரசியலாகப் போய்விடும். மலிவான அரசியல் செய்ய எமக்குத் தெரியாது" என்று அவர் பேசினார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அணி மாறினாலும் கொள்கையை மாற்ற முடியாது: வேளச்சேரி தி.மு.க மேடையில் ஆளூர் ஷாநவாஸ் அதிரடி
PulseNews சுருக்கம்

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.சி.க நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆளூர் ஷாநவாஸ், அரசியல் அணி மாறினாலும் தங்கள் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆட்சி மற்றும் காட்சிகள் மாறினாலும், தாங்கள் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் கொள்கைகளில் இருந்து பின்வாங்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சி மற்றும் கலைஞர் அவர்களின் கொள்கைகளை மக்களிடம் முன்னிறுத்திப் பேசியவர்கள், குறுகிய காலத்தில் அதை மாற்றிக்கொள்வது மலிவான அரசியலாகிவிடும் என்று ஷாநவாஸ் விமர்சித்தார். கொள்கை மாற்றமின்றி, தொடர்ந்து அதே கொள்கை மற்றும் கோட்பாடுகளையே தாங்கள் முன்னிறுத்துவதாக அவர் அந்த நிகழ்ச்சியில் உறுதிபடக் குறிப்பிட்டார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics