PulseNews
அரசியல்

'விஜய்யின் உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான்...' -‘ரெய்டு’ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய் பல்வேறு அரசுத் துறைகளில் மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ''தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு அரசுத் துறைக்கும் நேரில் சென்று நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு புதிய சாதனை படைத்து வருகிறார். அவர் ஏற்கனவே மெட்ரோ ரயிலில் நேரடியாகப் பயணம் செய்து ஆய்வு நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்கே இருக்கும் நிலவரங்களைப் பார்வையிட்டதுடன், காவல் நிலையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, தற்போது வடகிழக்கு பருவமழை வரவிருக்கும் சூழலில் எந்தெந்தப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிய நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அதேபோல், சென்னை நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பணிகளைப் பார்வையிட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். தமிழக வரலாற்றில் எந்தவொரு முதலமைச்சரும் செய்யாத அளவிற்கு, இவ்வளவு பணிகளையும் முதல்வர் விஜய் நேரடியாகச் சென்று பார்த்துத் துரிதப்படுத்தி வருகிறார். அவருடைய உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான்; அது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்ததொரு நேர்மையான ஆட்சியைத் தந்து, நமது தமிழகத்தை ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஒரு முன்னோடி வழிகாட்டியாக மாற்ற வேண்டும் என்பதுதான்'' என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'விஜய்யின் உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான்...' -‘ரெய்டு’ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பல்வேறு அரசுத் துறைகளில் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதைப் பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், ஒவ்வொரு துறைக்கும் நேரடியாகச் சென்று விஜய் ஆய்வு செய்து புதிய சாதனை படைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்ட விஜய், அதனைத் தொடர்ந்து சிறைச்சாலைகளுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் விஜய் காட்டும் ஆர்வம் மற்றும் அவரது முயற்சிகள் குறித்து அமைச்சர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics