இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்! மோடியின் திட்டங்களுடன் வருகிறார் முக்கிய இராஜதந்திரி
அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) நடைமுறைப்படுத்த வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது முதல் பயணத்தின் போது, ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயக...

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சராகத் தனது முதல் இலங்கை பயணத்தை மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சம்பத் துயகொன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமர் மோடியின் முக்கியத் திட்டங்களுடன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.