PulseNews
அரசியல்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!

கள்ளக்குறிச்சி: ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நிறைவடைந்த சில நிமிடங்களிலேயே, கட்சி நிர்வாகி ஒருவர் மாநாட்டுப் பந்தலின் உயர் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பந்தலின் உயர் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் சாகசம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நிறைவடைந்த சில நிமிடங்களிலேயே, கட்சி நிர்வாகி ஒருவர் மாநாட்டுப் பந்தலின் உயர் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு நிறைவடைந்து தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மேடையை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இச்சம்பவம் அரங்கேறியது. மாநாட்டில் பங்கேற்ற விசிகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மாநாட்டு திடலின் பிரம்மாண்டமான மேல் கூரைப் பகுதிக்கு அசால்ட்டாக ஏறிச் சென்றார்.

கூரை மீது போன் பேச்சு & கையசைப்பு: கூரையின் உச்சிக்குச் சென்ற அந்த நபர், அங்கு நின்றபடியே மிகச் சாதாரணமான முறையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். மேலும், கூரையின் மேலிருந்தவாறு கீழே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்துத் தன்னை ஒரு தலைவரைப் போல நினைத்துக் கொண்டு உற்சாகமாக கையசைத்தார்.

கம்பிகளில் தொங்கி ஆபத்தான சாகசம்: இத்துடன் நிற்காமல், அங்கிருந்து கீழே இறங்க முற்பட்ட போது, மாநாட்டுப் பந்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த மிக உயரமான இரும்பு கம்பிகளைப் பிடித்துத் தொங்கியவாறு ஆபத்தான முறையில் கீழே இறங்கி சாகசம் செய்தார்.

அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள்: தங்களின் தலைக்கு மேலே கூரை கம்பிகளில் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்குவதைப் பார்த்த கீழே இருந்த தொண்டர்களும், மாநாட்டு நிர்வாகிகளும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தனர்.

ஏற்கனவே மாநாட்டின் போது ஏற்பட்ட பெருந்திரளான கூட்ட நெரிசல், தலைவரைப் பார்க்க முண்டியடித்ததில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் திருமாவளவனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பரபரப்பு நிலவி வந்த சூழலில், இச்சம்பவமும் சேர்ந்து மாநாட்டுத் திடலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. கீழே நின்றிருந்தவர்கள் அலறியடித்து எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்த நபர் ஒருவழியாகப் பாதுகாப்பாக கீழே இறங்கினார். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
PulseNews சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நிறைவடைந்த சிறிது நேரத்தில், கட்சி நிர்வாகி ஒருவர் மாநாட்டுப் பந்தலின் மிக உயரமான கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டார்.

அந்த நபர் கூரையின் உச்சிக்குச் சென்று, செல்போனில் பேசியபடியே அங்கிருந்த தொண்டர்களை நோக்கி கை அசைத்தார். இச்சம்பவம் மாநாட்டு வளாகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics