PulseNews
அரசியல்

வீட்டுக்கு முன்னாடி கார் நிறுத்தினா ரூ. 25,000 கட்டணமா? கர்நாடக அரசைக் கண்டித்த ராமலிங்க ரெட்டி

வீடுகளுக்கு வெளியே பொதுச் சாலைகளில் கார்களை நிறுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை அதிக கட்டணம் விதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பெங்களூரு சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ராமலிங்க ரெட்டி, முதல்வர் டி.கே. சிவகுமாருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கட்டணம் நடுத்தர மக்களுக்கு பெரும் நிதிச் சுமையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிடிஎம் லேஅவுட் (BTM Layout) தொகுதியின் எம்.எல்.ஏ-வான ராமலிங்க ரெட்டி, ஆகஸ்ட் 24 அன்று எழுதியுள்ள இந்த கடிதம், 'கிரேட்டர் பெங்களூரு அதிகாரம் (பார்க்கிங்) விதிகள், 2026' (Greater Bengaluru Authority (Parking) Rules, 2026) வரைவு ஆகஸ்ட் 11 அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வந்துள்ளது. இந்த வரைவு விதிகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்க பெங்களூரு நகரில் முன்மொழியப்பட்டுள்ள இந்த கட்டண பார்க்கிங் அனுமதி திட்டத்தின் கீழ்: சிறிய கார்களுக்கு (Hatchback) ஆண்டுக்கு ரூ. 15,000 செடான் (Sedan) வகை கார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 எஸ்.யூ.வி (SUV) வகை கார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: "நகரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டியதும் உண்மைதான். இருப்பினும், இந்தச் சூழலில் சாதாரண குடிமக்களின் நிதி நிலைமையைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், ஜிஎஸ்டி, சுங்கக் கட்டணம் மற்றும் பிற செலவுகள் அதிகரித்து, நடுத்தர மற்றும் சாதாரண குடும்பங்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலில், வாகனம் வைத்திருப்பதற்காக ஆண்டுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை கூடுதல் பார்க்கிங் கட்டணம் விதிப்பது அவர்களுக்கு மற்றொரு நிதிச் சுமையாகவே அமையும். சட்டவிரோதமான மற்றும் நீண்ட நேர சாலை பார்க்கிங்கைக் கட்டுப்படுத்துவது அவசியம், அதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில், தவறாமல் வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் சொந்தக் கட்டிடத்திற்குள் பார்க்கிங் வசதி இல்லாத சாதாரண குடும்பங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம். உள்ஞார்ந்த குடியிருப்பாளர்களுக்குத் தேவையான விலக்குகளுடன் கூடிய ஒரு சமநிலையான, நடைமுறை தீர்வை எட்டுவதற்கு, பெங்களூரு எம்.எல்.ஏ-க்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" என்று ராமலிங்க ரெட்டி முதல்வரைக் கேட்டுக்கொண்டுள்ளார். முன்மொழியப்பட்டுள்ள பார்க்கிங் கட்டண முறை என்ன? பெங்களூரு குடியிருப்புகளுக்கான முன்மொழியப்பட்டுள்ள பார்க்கிங் அனுமதி முறையின் கீழ், பொதுச் சாலைகளைப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்களிடமிருந்து மாநகராட்சி பார்க்கிங் அனுமதி கட்டணத்தை வசூலிக்கலாம். முக்கிய அம்சங்கள்: *குடியிருப்பு பார்க்கிங் கட்டணமாக ஹேட்ச்பேக் கார்களுக்கு ரூ. 15,000, செடான் கார்களுக்கு ரூ. 20,000, மற்றும் எஸ்.யூ.வி கார்களுக்கு ரூ. 25,000 ஆண்டு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. *மிதிவண்டிகள் (Bicycles) மற்றும் ஆட்டோ ரிக்ஷா நிலையங்களில் நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு மட்டும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். *குடியிருப்பு பார்க்கிங் அனுமதி அதிகபட்சமாக 1 ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மாநகராட்சி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னரே ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். *குறைந்தபட்ச பார்க்கிங் விதிகளை மீறாத கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பார்க்கிங் அனுமதி வழங்கப்படும். *வணிகம் அல்லாத பகுதிகளில் இருசக்கர வாகனங்களுக்கு மணிக்கு குறைந்தபட்சம் ரூ. 20 எனவும், அதிக வணிகப் பகுதிகளில் கார்களுக்கு மணிக்கு அதிகபட்சமாக ரூ. 80 அடிப்படை வீதமாகவும் பார்க்கிங் கட்டணம் முன்மொழியப்பட்டுள்ளது.

The Indian Express2 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது
வீட்டுக்கு முன்னாடி கார் நிறுத்தினா ரூ. 25,000 கட்டணமா? கர்நாடக அரசைக் கண்டித்த ராமலிங்க ரெட்டி
PulseNews சுருக்கம்

பொதுச் சாலைகளில் வீடுகளுக்கு வெளியே கார்களை நிறுத்த ஆண்டுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு அமைச்சர் ராமலிங்க ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 24 அன்று அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், இந்த அறிவிப்பு நடுத்தர மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிடிஎம் லேஅவுட் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில வனத்துறை அமைச்சருமான ராமலிங்க ரெட்டி, இந்த புதிய கட்டண முறைக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மக்களின் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics