தமிழ்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வற்புறுத்தவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என வற்புறுத்தவில்லை - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த் தாய் வாழ்த்து பாடி துவங்குவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வற்புறுத்தவில்லை - மத்திய அரசு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட வேண்டும் என்று தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் வந்தே மாதரம் மற்றும் இறுதியில் தேசிய கீதம் அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என எவ்வித வற்புறுத்தலும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி அமர்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.