PulseNews
அரசியல்

சென்னை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ஜுனா நியமனம்!

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் மண்டல அளவிலான பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களின் பணிகளையும் ஒருங்கிணைக்கும் சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள் போன்ற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர் (மண்டலம்-1) மற்றும் மணலி (மண்டலம்-2) ஆகிய மண்டலங்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் ரமேஷ் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மாதவரம் (மண்டலம்-3) மற்றும் தண்டையார்பேட்டை (மண்டலம்-4) ஆகிய மண்டலங்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் பொறுப்பாக செயல்படுவார். இராயபுரம் (மண்டலம்-5) மற்றும் திரு.வி.க.நகர் (மண்டலம்-6) ஆகிய மண்டலங்களின் பொறுப்பு அமைச்சராக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூர் (மண்டலம்-7), அண்ணாநகர் (மண்டலம்-8) மற்றும் தேனாம்பேட்டை (மண்டலம்-9) ஆகிய மூன்று மண்டலங்களுக்கு கைத்தறி, துணி நூல் மற்றும் காதித் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோடம்பாக்கம் (மண்டலம்-10) மற்றும் வளசரவாக்கம் (மண்டலம்-11) ஆகிய மண்டலங்களின் பொறுப்புகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே பிரபு கவனிப்பார். அமைச்சர் விக்னேஷ் ஆலந்தூர் (மண்டலம்-12) மற்றும் அடையார் (மண்டலம்-13) ஆகிய மண்டலங்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெருங்குடி (மண்டலம்-14) மற்றும் சோழிங்கநல்லூர் (மண்டலம்-15) ஆகிய மண்டலங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க. விக்னேஷ் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் வெளியிட்டுள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ஜுனா நியமனம்!
PulseNews சுருக்கம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அந்தந்த பகுதிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அனைத்து மண்டலங்களின் பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு சென்னை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மண்டல அளவிலான வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்துவதையும், பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள் போன்ற அவசர நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics