CV Shanmugam Vs EPS: ஜெயிச்சா இபிஎஸ்.. தோற்றால் மட்டும் மா.செ.க்கள் பொறுப்பா? இப்படி ஒரு தலைவரா- கொந்தளித்த சி.வி.சண்முகம்

தேர்தல் தோல்வி- இரண்டாக பிரிந்த அதிமுக

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவிற்கு ஆதரவளித்தது அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் திட்டமிட்டனர். இதற்காக தவெகவுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்ட நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணி தவெகவிற்கு ஆதரவு அளித்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது எதிர்ப்பு நிலையில் இருந்த 25 எம்எல்ஏக்களின் கட்சி பதவியை பறித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் எதிர்ப்பு அணி வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தல் தோல்விக்கு காரணம் யார்.?

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைத்தவர்கள் தான் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். எனவே தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகள் தான் காரணம்,பொதுச்செயலாளர் காரணம் இல்லையென கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறுகையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உண்மைக்கு புறம்பான, தவறான தகவலை சொல்லி வருகிறார்.

எங்களை தாழ்த்துவதாக நினைத்து எடப்பாடி பழனிசமியை தரம் தாழ்த்தி பேசுகிறார் அக்ரி கிருஷ்ண மூர்த்தி. யார் இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவர் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எனவும் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

பாமகவால் 34 தொகுதியில் அதிமுக வெற்றி

தற்போது சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை அதிமுக இழந்துள்ளது. அப்போதைய சூழலில் வலுமையான தலைமை வேண்டும் என்பதால் இபிஎஸ்யை தேர்வு செய்தோம் ஆனால் அதற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் எனக்கு 6 தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் 3 தொகுதி வெற்றி பெற்றுள்ளோம். இதே போல கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலும், நத்தம் விஸ்வதநாதனுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பாமக கூட்டணி இருந்ததால் 34 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்றால் எடப்பாடி செல்வாக்கு தான் காரணம், தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர் பொறுப்பா? என்று கேள்வி எழுப்பினார்.

பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி

அதே நேரம் எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் கே.பி.முனுசாமி அவர் மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.? அவர் வெற்றி பெற்றாரா ? சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 37 தொகுதிகளில் 35 தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு யார் காரணம் என கேட்ட சி.வி. சண்முகம், தமிழ்நாட்டில் தென் மாவட்டம், டெல்டா, சென்னையில் அதிமுக தோல்வி அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தால் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி கட்சியில் பொறுப்பை ராஜினாமா செய்தார். எனவே எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என கேட்டு வருகிறோம்.

கூட்டத்தைக் கூட்டுங்கள் தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன என்று நான் சொல்கிறேன். இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தலுக்காக ஒரு பைசா கொடுத்துள்ளாரா ? என அடுத்தடுத்து கேள்வி எழுப்பியவர், டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டாம் என நாங்கள் தான் மறுத்தோம் என்று சொல்கிறார்கள். தேமுதிகவை திட்டமிட்டு வெளியேற்றினார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார்.

கே

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்களால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துபவர்கள், தோல்விக்கு மாவட்டச் செயலாளர்களைப் பொறுப்பாக்குவது ஏன் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். நிர்வாகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தோல்விக்கான காரணங்களை ஆராய கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி பலத்தால் மட்டுமே கணிசமான இடங்களை வென்றதாக சி.வி. சண்முகம் சுட்டிக்காட்டினார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியதை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், தான் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகச் சொல்லவில்லை, மாறாக தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கட்சிப் பதவிகள் பறிக்கப்படுவது மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடு குறித்த தனது அதிருப்தியை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.