வவுனியாவிலிருந்து உறவினர் வீடொன்றுக்கு வந்த மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து திரவமொன்றை குடித்து உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் மற்றும் மாலையில் வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று அங்கு ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்துள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்ப...

வவுனியாவிலிருந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்தையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் வெளியே இருந்த வேளையில், சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என நினைத்துக் குடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.