டாஸ்மாக் பணியாளர்களுக்கான நல அறிவிப்புகள்.. தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்பு!
டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு செய்தி: மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு, பண்டிகை முன்பணம், சீருடைத் தொகை, விடுமுறை, தூய்மை வசதிகள் உள்ளிட்ட நலன்கள் அறிவிப்பு; நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு நோக்கி முக்கிய முன்னேற்றம். TASMAC staff welfare announcement: Tamil Nadu govt hikes salaries and festival advance, improves uniforms, leave and shop maintenance benefits, marking key progress on long-pending demands while unions press for job security and pension.

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 1 முதல் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு, பண்டிகை முன்பணம், சீருடைத் தொகை, விடுமுறை மற்றும் தூய்மை வசதிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முன்னேற்றத்தை தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் வரவேற்றுள்ளது. இதனிடையே, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.