காவேரி மருத்துவமனை சார்பில் உறுப்பு தானம் செய்த குடும்பங்கள் கவுரவிப்பு
ஓசூர், ஆக.14: உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, காவேரி மருத்துவமனை சார்பில் ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்....
உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், உறுப்பு தானம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.