PulseNews
லைஃப் ஸ்டைல்

தரங்கம்பாடி அருகே முனிவேலங்குடி கிராமத்தில் 5 திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை அடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முனிவேலங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் உட்பட ஐந்து முக்கிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது. பழமை வாய்ந்த இத்திருக்கோயில்களின் திருப்பணிகள் அனைத்தும் ஊர் பொதுமக்களாலும் ஆன்மீக அன்பர்களாலும் திறம்படச் செய்து முடிக்கப்பட்டு, புனித நீர் தெளிக்கும் பெருவிழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இநன்னாளில் முனிவேலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.

சிறப்பு யாகசாலை பூஜைகள் ஆரம்பம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தின் முன்பாக மிக பிரம்மாண்டமான முறையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய திருக்கடங்கள் யாகசாலையில் ஸ்தாபனம் செய்யப்பட்டு, கடந்த 28-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளுடன் விழா முறைப்படி தொடங்கியது. வேத விற்பன்னர்களின் வேதமந்திர முழங்களுடனும், திருமுறைப் பாராயணத்துடனும் தொடர்ச்சியாக யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு, அனைத்து தேவதைகளுக்கும் சிறப்பு ஆவாஹன பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் தினசரி நடத்தப்பட்டு வந்தன.

நான்காம் கால பூஜை மற்றும் மகா பூர்ணாகுதி

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக தினமன்று, அதிகாலையிலேயே நான்காம் கால யாகசாலை பூஜைகள் மிகக் கோலாகலமாகத் தொடங்கின. யாகத்தில் சிறப்பு திரவியங்கள், மலர்கள், பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களுக்குச் சிறப்புத் தூப தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதக் கடங்களைச் சிரசில் சுமந்தவாறு யாகசாலையிலிருந்து புறப்பட்டு, கோயிலின் பிரகாரத்தை வலம் வந்து விமான கோபுரங்களை அடைந்தனர்.

ஐந்து திருக்கோயில்களுக்கும் கும்பாபிஷேகம்

கோபுரக் கலசங்களை அடைந்த புனித நீர் அடங்கிய கடங்களில் இருந்த புனித நீரைக் கொண்டு, முதலில் பரிவார மூர்த்திகளின் ஆலயங்களான விநாயகர் ஆலயம், ஸ்ரீ இரட்டைப் பிள்ளையார் ஆலயம், கன்னியம்மன் ஆலயம் மற்றும் அய்யனார் ஆகிய நான்கு திருக்கோயில்களின் கும்ப கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதன்மைத் திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாகவும் ஆன்மீகச் சிறப்புடனும் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது வான்வெளியில் கருட பகவான் வட்டமிட பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியும் இறைவனை வழிபட்டனர்.

மகா அபிஷேகமும் பக்தர்களின் தரிசனமும்

கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை அடுத்து, மூலவர்களான ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ கல்யாணி அம்மன் ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இப் பெருவிழாவில் முனிவேலங்குடி மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் புனித தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம முக்கியஸ்தர்களும், விழாக்குழுவினரும், ஆன்மீக அன்பர்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தரங்கம்பாடி அருகே முனிவேலங்குடி கிராமத்தில் 5 திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..
PulseNews சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முனிவேலங்குடி கிராமத்தில், ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களின் பங்களிப்போடு இந்த பழமை வாய்ந்த கோவில்களின் திருப்பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிக்கப்பட்டன.

கோவில்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle