தேசிய நல்லாசிரியர் விருதுகள்: டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பங்கேற்பு
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 48 சிறந்த ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வின் போது, விருது பெற்ற…

புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 48 சிறந்த ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வின் போது, விருது பெற்ற ஆசிரியர்களின் சாதனைகளை விளக்கும் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.
விழாவில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆசிரியர்களை உரிய முறையில் மதிக்கும் சமூகமே முற்போக்கான சமூகம் என்று குறிப்பிட்டார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி ஒரு முக்கிய அதிகாரமளிக்கும் கருவியாகத் திகழ்கிறது என்பதையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா மற்றும் புளியம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை என இருவர் இந்த தேசிய விருதினைப் பெற்றுள்ளனர். விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேலும் ஊக்குவித்திட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.