தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில்களிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சிறப்பு வ…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில்களிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சிறப்பு வழிபாடுகளும், கண்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
சென்னையில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில் 36-வது ஆண்டாக மூன்று நாள் தசாவதார கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆன்மீக நிகழ்வுகள் மட்டுமின்றி, விழுப்புரம் கிருஷ்ணர் கோயில் மற்றும் கோயம்புத்தூர் வேலாண்டிபாளையம் கிருஷ்ண சுவாமி கோயில்களில் உறியடி உற்சவம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளியில் சிறப்பு பஜனை நிகழ்ச்சியுடன் விழா நடைபெற்றது. அதேபோல், கொடைக்கானல் பண்ணைக்காடு ஸ்ரீஹரி பஜனை மடாலயத்தில் கோமாதா மற்றும் ராமர் பாதத்தில் மழலையர்கள் நடந்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் விழாவினை முன்னின்று நடத்தினர்.