மும்பை ஜிஎஸ்பி மகா கணபதி சிலை: ரூ.703 கோடிக்கும் அதிகமான காப்பீடுடன் பிரம்மாண்ட ஏற்பாடு
மும்பையில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, கிங்ஸ் சர்க்கிளில் உள்ள ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் மகா கணபதி சிலைக்கு 703 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம…
மும்பையில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, கிங்ஸ் சர்க்கிளில் உள்ள ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் மகா கணபதி சிலைக்கு 703 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான சிலையை பாதுகாப்பதற்கே இவ்வளவு பெரிய தொகை காப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்களால் இந்த விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் தொகையானது சிலைக்காக மட்டுமல்லாமல், விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் உயிர் மற்றும் அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ள இந்த விழாவில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக பக்தர்களுக்கு டிஜிட்டல் ரசீதுகள் வழங்கப்படவுள்ளன. பல்வேறு பாதுகாப்பு மற்றும் நவீன ஏற்பாடுகளுடன் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா முன்னெடுக்கப்படுகிறது.