PulseNews
லைஃப் ஸ்டைல்

வாய் பேச முடியாத மகனை எழுத்தால் பேசவைத்த பாசமிகு அன்புத்தாய்.. கல்வி கொடுத்த அசத்தல் ஐடியா..!

பேச்சு மாற்றுத்திறன் கொண்ட மகனுக்காக தாய் செய்த விஷயம் பாராட்டுகளை குவிகிறது. 11 வயது சிறுவன்: கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஜெசிகா ப்ளசர். இவரின் மகன் ஹண்டர் (வயது 11). இவர் வாய்பேச இயலாத நபர் ஆவார். பிறரைப்போல தனது பிள்ளையும் செயல்பட வேண்டும் என எப்போதும் மகனை அன்புடன் கவனித்துக்கொண்டு இருந்த தாய், மகன் சொல்வதை எளிதாக புரிந்துகொள்ள வழியை யோசித்துக்கொண்டு இருந்துள்ளார். இதையும் படிங்க: World News: அதிபயங்கரம்... இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.! கீபோர்டு: அச்சமயம், மகனுக்கு தெரிந்த கல்வி என்ற ஆயுதத்தை பயன்படுத்திய ஜெசிகா, தனது மகனுக்காக கையில் கம்பியூட்டர் கீபோர்டை பச்சை குத்தியுள்ளார். இந்த கீபோரில் கம்பியூட்டரில் இருப்பது போல ஆங்கில எழுத்துக்களும், சிரிப்பு, கவலை உட்பட ஒருசில எமோஜியும், அன்பை பரிமாறும் வாசகமும் இருக்கின்றன. பாராட்டு: இதனை பயன்படுத்தி சிறுவன் தனது தாயிடம் தனக்கு தேவை என்பதை எழுதி காண்பிக்க, தாயும் அதற்கேற்ப செயல்படுகிறார். தனது மகனின் நிலையை அறிந்து செயல்பட்ட தாயின் அந்த உள்ளம் தற்போது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இதையும் படிங்க: World News: விமானம் விழுந்து நொறுங்கி சோகம்.. 13 பேர் பரிதாப பலி.!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வாய் பேச முடியாத மகனை எழுத்தால் பேசவைத்த பாசமிகு அன்புத்தாய்.. கல்வி கொடுத்த அசத்தல் ஐடியா..!
PulseNews சுருக்கம்

கனடாவைச் சேர்ந்த ஜெசிகா ப்ளசர் என்ற தாய், பேசும் திறன் இல்லாத தனது 11 வயது மகன் ஹண்டருடன் தொடர்புகொள்ள புதிய வழியைக் கண்டறிந்துள்ளார். தனது மகன் மற்றவர்களைப் போலவே இயல்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் இதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, ஹண்டர் தனது எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் வகையில் கீபோர்டு கருவியை அந்தத் தாய் பயன்படுத்தியுள்ளார். மகனின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle