தஞ்சை பெரிய கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
தஞ்சாவூர்: உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.63 நாயன்மார்களில் முதல் மூவரில் ஒருவர் சுந்தரர். இவரது அழகில் மயங்கிய சிவபெருமான் இவரை சுந்தரா என்று அழைத்ததுடன், இவருக்காக தூது சென்ற பெருமைக்குரியவர். திருநாவலூர் (தற்போது விழுப்புரம் மாவட்டம்) என்னும் திருத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் சுந்தரர் 8ம் நூற்றாண்டில் தோன்றினார். இவரது இயற்பெயர் நம்பியாரூரார். ஆடி சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரமூர்த்தி நாயனாரை சிவனார் ஆட்கொண்டு அருளினார். அதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தஞ்சாவூரில் உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரியக்கோயிலில் இன்று ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நால்வர் பெருமானின் ஒருவரான ஆளாள சுந்தரர் என அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விசேஷ அபிஷேகங்கள், புஷ்ப அலங்காரங்கள் செய்து மாலையில் பரவை நாச்சியார் அம்பிகா சமேத சுந்தரமூர்த்தி நாயனார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் தஞ்சையின் ராஜ வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Etv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →