PulseNews
லைஃப் ஸ்டைல்

கம்பீர அணிவகுப்பு... தஞ்சையில் கலெக்டர் ரேவதி தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர்: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ரேவதி தேசியக் கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து 29 பயனாளிகளுக்கு 13 கோடியே 13 இலட்சத்து 13 ஆயிரத்து 062 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்.

நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி வைத்தார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர் ரேவதி, மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் ஆகியோர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 29 பயனாளிகளுக்கு 13 கோடியே 13 இலட்சத்து 13 ஆயிரத்து 062 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ. 40,000 காசோலையும், 4 தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.13131362 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 233 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி, கரந்தை உமா மகேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல இல்லம், மாத்தூர் காந்திமிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 281 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்ட வருவாய் அலுவலர் கு.இளங்கோவன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், வருவாய் கோட்டாட்சியர் நித்யா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமை தாங்கினார். விழாவில் மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதையடுத்து நடந்த விழாவில் மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் அஞ்சுகம் பூபதி பரிசு, சான்றிதழ் வழங்கினார் . பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் .

இந்த விழாவில் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊழியர்கள் , தூய்மை பணியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை ரெயில்வே குட்ஷெட்டில் இன்று 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ரெயில் நிலைய உதவி மேலாளர் சுந்தர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஒப்பந்த மேலாளர் சண்மு கவேல் என்கிற ஜம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன் தலைமை தாங்கினார். விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட தலைவர்களின் தியாகங்கள் குறித்து நினைவு கூறப்பட்டது.

விழாவில் குட்ஷெட் வணிக மேற்பார்வையாளர் பாக்யராஜ், எச்.எம்.எஸ் நிர்வாகிகள் மோகன், செல்வராஜ், ராஜசேகர் மற்றும் ரெயில்வே ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கம்பீர அணிவகுப்பு... தஞ்சையில் கலெக்டர் ரேவதி தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
PulseNews சுருக்கம்

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ரேவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, 29 பயனாளிகளுக்கு மொத்தம் 13 கோடியே 13 லட்சத்து 13 ஆயிரத்து 62 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தின் ஒரு அங்கமாக தஞ்சையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle