குளுக்கோமீட்டர் இல்லாமலே சுகர் அளவு அதிகமாக இருப்பதை அறிய முடியுமா? மருத்துவர் கூறும் முக்கிய அறிகுறிகள்
சுகர் அளவை கண்காணிக்க குளுக்கோமீட்டர் அவசியம் என்றாலும், அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு போன்ற சில எச்சரிக்கை அறிகுறிகள் மூலம் ரத்த சர்க்கரை உயர்வை அறியலாம். எந்த அறிகுறி தென்பட்டால் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்பதை மருத்துவர் விளக்குகிறார்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதிக்க குளுக்கோமீட்டர் முக்கியமான கருவியாக இருந்தாலும், உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் மூலமாகவும் சர்க்கரை அளவு அதிகரிப்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும். அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு மற்றும் உடல் சோர்வு போன்றவை ரத்த சர்க்கரை அளவு உயர்வதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த அறிகுறிகள் தென்படும்போது அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவ கவனிப்பு மேற்கொள்வது அவசியம் என்று மருத்துவர் விளக்குகிறார். உடல் காட்டும் இத்தகைய மாற்றங்களை வைத்து சர்க்கரை அளவை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை அவர் விரிவாக எடுத்துரைக்கிறார்.