PulseNews
லைஃப் ஸ்டைல்

கோவில் சொத்துகளைப் பாதுகாப்பது குறித்து அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்தியேகமாக அமைக்கப்படுகிறது. இந்த குழு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துக்கள் மற்றும் வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துக்கள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என முழுமையாக அறிக்கை தயார் செய்து விரைவாக அளித்திட அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இக்குழுவிற்குத் திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் தலைவராகவும், திருக்கோயில் இணை ஆணையர், பழனி வருவாய்க் கோட்டாட்சியர், திண்டுக்கல் துணை ஆட்சியர், உதவி இயக்குநர் (நில அளவை), தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். பழனி கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஆலோசனையின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Nakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle