PulseNews
லைஃப் ஸ்டைல்

'பெரியாரை விமர்சனம் செய்தால் அது வன்மம்; இவ்வளவுதான் உங்கள் பகுத்தறிவு': ஓவியாவின் கம்யூனிஸ்ட்கள் பதிலடி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் செயல்பாடுகள் மற்றும் வெண்மணி சம்பவத்தில் அவரது நிலைப்பாடு குறித்து வைத்த கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பெரியாருக்கு ஜனநாயகம் கிடையாது; வெண்மணி சம்பவத்தை இரண்டு கட்சிகளின் பிரச்சனை என்று தவறாகப் பார்த்தார்" எனத் தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு பெண்ணியவாதி மற்றும் பெரியாரிய செயல்பாட்டாளர் ஓவியா மற்றும் பெரியாரியவாதி ஆதி அசுரன் ஆகியோர் வரலாற்றுச் சான்றுகளுடன் பதிலடி கொடுத்துள்ளனர். இதில் ஓவியாவின் கருத்துக்கு இடதுசாரிகள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். ஓவியா தனது கருத்தில், பெரியார் கம்யுனிசக் கொள்கையை நேசித்தார். ஆனால் தனது இலக்கை அடைவதற்குக் கம்யுனிஸ்டு கட்சியின் வழிமுறைகளை அவர் அங்கீகரிக்கவில்லை. இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், சாகித்ய அகதாமி விருது பெற்றவர். அவர் பேசிய காணொளி கேட்டேன். எனக்கு திராவிட இயக்கங்கள் மீதுதான் வருத்தம் வந்தது. பெரியார் கம்யுனிஸ்ட்டுகள் அதிலும் இந்தியக் கம்யுனிஸ்ட்டுகள் மீது வைத்த விமர்சனத்தைத் தொடர்ந்து எடுத்து வராமல் விட்டு விட்ட படியால் தமிழ்ச் செல்வன் போன்றோர் ஏதோ மறைக்கப் பட்ட உண்மைகளைக் கண்டறிந்து சொல்கின்ற சாதனையாளர் போல் பேசுகின்ற அவலத்தைக் காணுமாறு நேர்ந்து விட்டது. தமிழ்ச் செல்வன் நீங்கள் பேசியதில் ஒரு வார்த்தை கூட பொய்யில்லை. ஆனால் உங்களுக்கு பெரியாரை ஒரு சிறிதளவு கூட புரியவில்லை என்பதுடன் இனிமேல் உங்களுக்கு புரியும் என்கின்ற நம்பிக்கையும் எனக்கில்லை. எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரியாரைப் புரிந்து கொண்டு நீங்கள் மறுத்துப் பேசியிருக்கலாம். நிச்சயமாக இந்தியப் பொதுவுடமை இயக்கமும் திராவிட இயக்கமும் அவற்றின் வரலாறும் சாதனைகளும் வெவ்வேறு. ஆனால் இன்னொரு சீமான் போல் பேசி விட்டிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளும் உங்கள் உடல்மொழியும் உங்கள் அரங்கமும் இப்போது அந்த உரைக்காக உங்களை வாழ்த்திக் கொண்டிருப்பவர்களும் அதைத்தான் வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் மனச்சாட்சிக்கு ஒரே ஒரு கேள்வி ... மார்க்சும் ஏங்கெல்சும் லெனினும் வகுத்த வழிமுறைகளில்தான் நீங்கள் மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர் இங்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்களா.....? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும வகையில், ஆறுகுட்டி பெரியசாமி என்பவர் தனது பதிவில்,பெரியாரை விமர்சனம் செய்தால் அது வன்மம். இவ்வளவுதான் சகோதரி ஓவியாவின் பகுத்தறிவு. கம்யூனிஸ்ட்களின் மீது பெரியார் வைத்த விமர்சனத்தை திராவிட கட்சியினர் முன்னெடுக்காமல் போனது தவறு என்கிறார் ஓவியா. தாராளமாக முன்னெடுங்கள், யார் காணாமல் போகிறார்கள் என்று பார்த்து விடலாம். மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் வகுத்தளித்த வழிமுறைகளை ஓவியா நன்கு கற்றறிந்திருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மார்க்சியத்திலிருந்து எங்கே விலகிச் சென்றனர் என்பதையும் அவர் விளக்கட்டும்; தெரிந்து கொள்வோம். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தான் நடத்திய தொழிலில் தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்தவர் பெரியார். அங்கு ஆரம்பித்து 40% கமிஷனில் வந்து நிற்கிறது. எல்லாவற்றையும் பேசுவோம் ஓவியா தமிழ்ச்செல்வன் ஆரம்பித்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle